ஆம் ஆத்மியின் தமிழக தலைவர் உதயகுமார்?

ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் இணைந்த கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை கட்சியின் மாநிலத் தலைவராக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விரைவில் இடிந்தகரைக்கு வரவுள்ள கெஜ்ரிவாலே இதை நேரடியாக அறிவிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார் மற்றும் அவர் போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோரும் ஆம் ஆத்மியில் இணைந்தனர். தமிழகத்தில் இந்தக் கட்சி எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், உதயகுமார், ஜேசுராஜ் மற்றும் புஷ்பராயன் ஆகியோர் முறையே கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

நேற்று நெல்லையில் இக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத உதயகுமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.  இந்த நிலையில் உதயகுமாருக்கு கட்சியில் தலைவர் பொறுப்பு அளிக்கப்படவுள்ளது. மாநிலத் தலைவராக அவரை நியமிக்கவுள்ளனராம்.

உதயகுமாரை மாநிலத் தலைவராக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினரும், ஆம் ஆத்மி கட்சியினரும் கெஜ்ரிவாலை வலியுறுத்தியுள்ளனராம். விரைவில் உதயகுமாருக்கு ஆதரவு திரட்ட கன்னியாகுமரிக்கு வரவுள்ளார் கெஜ்ரிவால். அப்போது அவர் முறைப்படி உதயகுமாரை கட்சியின் தமிழக தலைவராக அறிவி்ப்பார் என்று கூறுகிறார்கள்.

உதயகுமார் தலைவரானால் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகத்தில் புதிய அடையாளம் கிடைக்கும். மேலும் தமிழக மீனவர் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக திரட்டி புதிய சக்தியாக ஆம் ஆத்மியை மாற்ற உதயகுமார் முயல்வார் என்பதால் ஆம் ஆத்மி மற்றும் உதயகுமாரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. என்ன நடக்கிறது என பார்ப்போம்.

Check Also

ஆம் ஆத்மி கன்னியாகுமரி வேட்பாளர் உதயகுமாரின் மனைவி திடீர் வேட்பு மனு தாக்கல்!

கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் பிரசாரத்திலும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *