கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் பிரசாரத்திலும் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வந்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். மீரா உதயகுமார் மனு தாக்கல் செய்தது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு வேளை ஏதாவது காரணம் காட்டி உதயகுமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்குப் பதில் மீரா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி