முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனவே கண்டிப்பாக அவரை எதிர்த்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று செய்தியார்களிடம் பேசினார் விஜயகாந்த். அப்போது பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாகவும், அதிமுகவுக்கு எதிரான பிரசாரம் தொடர்பாகவும் அவர் பேசினார். அப்போது
முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். எனவே கண்டிப்பாக அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று வேகமாக கூறினார் விஜயகாந்த்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விஜயகாந்த் கட்சி கூட்டணியிலயே அதிகமாக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கட்சி ஆரம்பித்த பின்னர் தனியாக போட்டியிட்டு டெபாசிட் இழந்து வந்த தேமுதிக, முதல் முறையாக கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒரு அந்தஸ்தைப் பெற்றது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது தேமுதிகவின் இரண்டாவது கூட்டணியாகும்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி