அரசியல் கட்சிகளால் வாங்கப்படும் மற்றும் கொடுக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும், ஆண்டுதோறும் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட கெடுவுக்குள் இது செய்யப்பட வேண்டும். ஆனால், 2012 – 2013ம் ஆண்டுக்கான கணக்கை பல்வேறு கட்சிகள் இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளன எனத் தெரிகிறது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை மட்டுமே காலகெடுவுக்குள் கணக்கை தாக்கல் செய்துள்ளன. கெடு முடிந்த சில நாட்களுக்குள் பாஜ.வும் கணக்கை தாக்கல் செய்து விட்டது. இந்நிலையில், இந்த கணக்கை தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு வருமான வரிச் சலுகையை வழங்க வேண்டாம் என்றும், அதை ரத்து செய்யும்படியும் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.