ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துச் சென்றார்.
பிரிஸ்பேன் விமான நிலையத்தை அடைந்த மோடி, ஒரு சில மணி நேரங்களில் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பல்கலைக்கழகத்தில் அறிவியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்தும், அவற்றின் பயன்பாடு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார் மோடி.
தேவையற்ற கழிவுகளை வேளாண்மைக்கு பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும், கரும்பு ஆலைக் கழிவுகளைக் கொண்டு பிளாஸ்டிக் தயாரிப்பது குறித்தும் பிரதமர் மோடிக்கு விஞ்ஞானிகள் விளக்கினர்.