தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெடரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம் சார்பில், தென்மண்டல மாநாடு, பழைய குற்றாலம், பவ்டா ரிசார்ட்டில் 21.02.2021 காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இம் மாநாட்டிற்கு மாநில தலைவர் திரு. பேராசிரியர் திரு Dr J. கனகராஜ், மாநில பொதுச் செயலாளர் திரு Dr.K.R. நந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கொரோனா காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வருமானம் குறைந்த வேளையில் பெற்றோர்களிடமிருந்து நாம் கட்டாயப்படுத்தி கல்வி தொகையினை வாங்காமல் அவர்களை அன்புடன் அரவணைத்து குறைந்த பட்சம் தொகையினையும், மீதி தொகையினை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கும்படி பணிக்க வேண்டும். ஏனெனில் நமக்கும் சரி, அவர்களுக்கும் சரி இந்த காலக்கட்டம் பெரும் இழப்பே. ஆகவே தான் நாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பல்வேறு வரிச்சுமையினை குறைக்கவோ தள்ளுபடி செய்யவோ வேண்டுகின்றோம்.
கிட்டத்தட்ட கல்வியாண்டு முடியும் தருவாயில் இருக்கின்ற நிலையில் மாணவர்களின் கல்வியும் சேதாரமாகமல் காப்பது நம் தனியார் பள்ளிகள் தான் என்பது மறுப்பதற்கில்லை. ஆகவே தங்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை எனில் எங்களிடம் தெரிவியுங்கள் என மாநில தலைவரும், மாநில பொதுச் செயலாளரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த தென்மண்டல மாநாட்டில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட த்தை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். அவர்களை மாநில தலைவர், மாநில பொதுச் செயலாளர் ஆகியோரால் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
மாநாட்டு நிகழ்ச்சிக்கு வருகைத் தந்து சிறப்பு அறுசுவை விருந்தளித்தது மாவட்ட நிர்வாகிகள் பங்களிப்பு எல்லோராலும் வரவேற்கப்பட்டது.
ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K.சங்கர்