போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் ஆகியோரது வழிக்காட்டுதலின்படி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி இணை செயலாளர் திரு.J. வாசுதாசன், தென்சென்னை மாவட்ட தலைவர் திரு சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்ட “32 வது சாலை பாதுகாப்பு மாதம்” இன்று ( 17.02.2021) காலை 9.30 மணியளவில் நடந்தது.
இந் நிகழ்வில், திருவான்மியூர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. மாரியப்பன் அவர்கள் சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தினார். பொதுமக்கள் மற்றும் காவல்துறை நண்பர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K.சங்கர், படங்கள்:
PPFA தென்சென்னை மாவட்டம் டீம்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி




