மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் பற்றி மட்டும் விசாரிக்கலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யலாம் என்றும், விவகாரம் பெரிய அளவிலானது என்பதால், விசாரணையை படிப்படியாக நடத்தலாம் என்றும் கூறினார்.
கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தவுக்கு விளக்கம் கேட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கனிம வள முறைகேடுகளை பற்றி மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா அல்லது 32 மாவட்டங்களிலும் கனிம வளமுறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமா என்றும், தான் விரும்பும் அதிகாரிகளை விசாரணை குழுவில் இடம்பெற அனுமதி வழங்க கோரியும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.