[pullquote]
குழந்தைத்தனமாக பேசாமல், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நீங்கள், அந்த பதவிக்கான மதிப்பை அளிக்க வேண்டும்[/pullquote]
அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆதிரித்து, அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பேசும்போது, “ராகுல் காந்தி எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர். சில எதிர்க்கட்சி தலைவர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். ராகுல் குறித்து அவர்கள், “இளவரசர்” என்றும் மற்றொரு சமயத்தில் ‘காமெடியன்’ என்றெல்லாம் விமர்சிக்கின்றனர்.
நாட்டின் பிரதமராக விரும்பும் அவர், ஏன் இப்படி குழந்தைத்தனமாக நடந்துகொள்கிறார் என்பது தெரியவில்லை. இனிமேலாவது அந்த பதவிக்கேற்றவாறு பொறுப்புடன் அவர் பேச வேண்டும். பதவி கிடைத்தால், மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று மட்டும் கூறுங்கள்.
பாஜகவின் அரசியல் கொள்கை பேரழிவை ஏற்படுத்துவதாக உள்ளது. என கணவர் மீதான குற்றச்சாட்டுகளை விட்டுவிட்டு வேறு எதையாவது பேசி பிரச்சாரம் செய்து பார்க்கலாம்.
அமேதி மக்கள் ராகுலுக்கு வாக்களிக்க வேண்டும். இந்தத் தொகுதியில் நடைபெறும் மாற்றம், நாட்டிற்கே முன்னோடியாக இருக்க வேண்டும்.
ஆம் ஆத்மியை சேர்ந்த ஸ்மிரிதி இராணி, இருட்டு அறையில் அமர்ந்துகொண்டு அமேதியில் மின்சாரம் இல்லை என்கிறார்.
மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியை எந்தக் கட்சி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால், வளர்ச்சி இருக்க வேண்டும். அமேதியில் ராகுல் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை நீங்கள் அறிவீர்கள்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளில் பாதி, காங்கிரஸ் கட்சியினுடையது. அந்த கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் வாக்குறுதிகளை நகல் எடுத்துதான் வெளியிட்டுள்ளனர்.
வாக்கு என்பது உங்கள் உரிமை, நீங்கள் அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கவில்லை என்றால், அவர்களுக்கு உங்கள் முன்வந்து நிற்கும் சக்திகூட இருக்காது. இந்தத் தொகுதிகளில் காங்கிரஸை எதிர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த வேட்பாளர்கள் கிடையாது” என்று பிரியங்கா பேசினார்.