சென்னை இராயபுரம் லோட்டஸ் ராமசாமி தெருவில் தனியார் லெதர் கம்பெனி உள்ளது. அந்த கம்பெனியில் இன்று மதியம் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இங்கு பலதரப்பட்ட தோலினால் செய்யப்படும் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், அவை அனைத்தும் தீயில் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது. விபத்தின் மதிப்பு இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
சுமார் இரண்டு மணி நேரமாக எரியும் தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்து வருகின்றனர். இது சம்பந்தமாக இராயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீ முழுவதும் அணைந்த பிறகு சேதம் பற்றி விவரம் தெரிய வரும்.
செய்தியாக்கம் & ஒளிப்பதிவு: வே. கந்தவேல்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி