சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை சுங்கச்சாவடியில் அமைந்துள்ள தங்கம் மாளிகையில் மிக பிரமாண்டமான முறையில் 15.10.2022, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளரும், செயலாளருமான ” Gem of India” திரு. J.B. விமல் M.A, M.Phil., அவர்களது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம் ” திரு. MJF Ln Dr. லி. பரமேஸ்வரன் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தி, மாணவ, மாணவிகளை கெளரவித்தார்.
இந்நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி மேலாளருமான திரு. Ln Dr. D. மகேந்திரன் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
ஒளிப்பதிவு, படங்கள்: L. வேலாயுதம்
செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி





