தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில், மதுபான கடைகள் திறக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்களது ஆணைக்கிணங்க, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வட சென்னை கிழக்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பாக மதுபான கடைகளை (டாஸ்மாக்) திறப்பதை எதிர்த்து, 13.06.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், பழைய வண்ணை, சுழல் மெத்தை, காமாட்சி அம்மன் ஆலயம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:” கிங்மேக்கர்” Ln B.செல்வம் M.A.,