திருமுல்லைவாயல் காவல்துறைக்கு டியுஜே சார்பில் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்

ஒரு கடத்தல் தொடர்பான திருமுல்லைவாயலில் காவல் நிலையத்திற்கு செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

காவல்துறை நண்பர்களே வணக்கம்,

நாங்கள் உங்களை போல் மக்கள் பணிகளை செய்து வருகிறோம். நாட்டில் நடக்கும் சம்பவங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் நடந்து முடிந்த கடத்தல் செய்தியை சேகரிக்க திருமுல்லைவாயலில் காவல் நிலையத்திற்கு நேற்று பல செய்தியாளர்கள் சென்றோம். அப்போது காவல் நிலையத்தை பூட்டி வைத்துள்ளனர். கேட்டால் நிருபர்கள் உள்ளே வர கூடாது என்று ஆய்வாளர் திரு.ராஜேஷ்கண்ணா கூறியதாக பெண் காவலர் (பாரா) கூறினார். செய்தி சேகரிக்க விடாது எங்களை அனுமதிக்காதது குறித்து எங்களுக்கு வருத்தம் கிடையாது.

ஆனால் புகார் கொடுக்க பொதுமக்களை காவல் நிலையத்திற்குள் விடவில்லை. பத்திரிகையாளர்களுக்கு பயந்து காவல் நிலையத்தையே மூடியுள்ளனர். இந்த நிலை மிகவும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இச்செயலுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

Check Also

நமது வ(வி)ழிக்காட்டிக்கு 75 ஆம் பிறந்த நாள்!

பத்திரிகையாளர் என்பவர் சாதராணமானவர்கள் அல்ல, அவர்கள் இந்த ஜனநாயக நாட்டின் நான்கு தூண்களில் முக்கிய தூணாக மக்களோடு பழகி அவர்களுக்கு …