போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மேற்கு மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம், 23.10.2023, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 மணியளவில் , மாவட்ட அலுவலகத்தில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தொழில்நுட்ப அணி தலைவரும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார் முன்னிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் திரு உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் புதியதாக இணைந்தவர்களுக்கு சங்கத்தின்அடையாள அட்டையினை வழங்கப்பட்டது. முன்னதாக நமது சங்கம், நமது இதழ் செயல்பாடுகளையும், புதியவர்கள் எங்ஙனம் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைனை திரு. ஜெயக்குமார், திரு. உதயகுமார் எடுத்துரைத்தனர். மேலும் மாவட்டத்திற்கான பெயர் பலகையினை மாநில தலைவரது திருக்கரங்களால் திறந்து வைப்பதற்கான ஆலோசனையும் விவாதிக்கப்பட்டு,
இதனை விரைவில் நிறைவேற்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக் கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு.” ஜீனியஸ்” K. சங்கர், மாவட்ட செயலாளர் திரு. விஜயகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு. மேத்யூ, துணை செயலாளர் திரு. மணி, மாவட்ட உறுப்பினர்கள் திரு. ஆனந்தன், திரு. சுரேஷ், திரு. ரூபன் ஜிரிஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி

