” லியோ ” திரை விமர்சனம்- திரைஜித்தன்.

“நா ரெடியா வரவா. அண்ணன் வரவா” என கடந்த சில மாதங்களாக விஜய் ரசிகர்களை சூடேற்றிய பாடல் வரிகள். ஏதோ ஒரு வகையில் அரசியல் அஸ்திவார பாடலை போல அமைத்து உள்ளே சென்று பார்த்தால் வில்லத்தனமான கோஷ்டியுடன் ஆட்டம்…பாட்டம். சரி படம் என்ன சொல்லுது.

வட நாட்டு கோடியில் தான் உண்டு தன் மனைவி,மகன், மகள் குடும்பம் உண்டு என காபி ஷாப் நடத்தி வரும் பார்த்திபன் கடைக்கு வரும் ரவுடி கும்பலை தன் பெண்ணை துவசம் செய்ய நிணைப்பவர்களை அதிரடியாய் அடித்து துரத்துகிறார். இதில் பல உயிர்கள் பலியாக, கோர்ட் நிரபராதி என சொல்ல, பத்திரிகைகளில் பிளாஷ் ஆகிறார்.

இதனை பார்க்கும் போதை மருந்து உற்பத்தி செய்யும் சகோதரர்கள் ” அட நம்ம லியோ” என இவர் இடம் தேடி வருகின்றனர். வந்தவர்கள் நீ தான் அவன் என சொல்ல , நான் அவனில்லை என்கிறார் பார்த்திபன். அவர்களும் இவரிடம் அகப்பட்டு எகிற ஓடுகின்றனர்.

இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்க மகனை கடத்து விட, களத்தில் இறங்கி ஒட்டு மொத்த கும்பலையும் அழித்து, நான்தான்டா லியோ என சொல்லி விட்டு மகனோடு மீண்டு குடும்பத்துடன் மீண்டும் தன் வாழ்க்கையை தொடர்கிறார். அம்புடுதேன் கதையென்றாலும் போதை கூட்டத்தின் தலைவனுக்கு மூட நம்பிக்கையால் நரபலி கொடுக்க மகனையா…மகளையா என்பதில் குரூர போட்டி சண்டையில் தன் தங்கையை இழக்கிறான் லியோ. அய்யோ அப்புறம் இவரும் கொல்லப்பட(?) சினிமா லாஜிக்கு கேற்ற சமத்தான பிள்ளையாக வலம் வரும் போது தான் இதனை ரசிகர்களுக்கே வெறியூட்டும் வகையில் சண்டைக்காட்சிகளை ( சும்மா சொல்லக் கூடாதுங்க அன்பறிவு உழைப்பு செம தீனிப்பா.

விஜய் இதனை மிகவும் ஈடுபாட்டுடன் செய்திருப்பது ஹாட்ஸ்அப்) தந்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். படதாதோடு ஆரம்ப பத்து நிமிட காட்சிகளை மிஸ் பண்ணாதீங்க சொன்னது கழுதை புலியுடன் விஜய் சண்டைக்கு தான் போல ( நமக்கு அதே நேரம் அடிமைப் பெண் படத்தில் சிங்கத்தோடு புரட்சி தலைவரது சண்டைக்காட்சி கண்முன் ஓடுதே). இந்த கழுதை புலி அடங்கி இவரே சுப்பிரமணி என பேரு வச்சு தன் வீட்டிலே வளருதாம்.

ஒரு கட்டத்தில் இவரது வீட்டுக்குள் நுழையும் வில்லன் ஒருவனை குத்தி கொதறும் போது நம் ரசிகன் விசிடிலடித்து மகிழ்ந்தானே. ஆங்! அவரோ ஜோடியை பத்தி, சும்மா சிக்குன்னு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக த்ரி ஷா கணவன் மேல் காட்டும் அன்பு சிலிர்க்க வைக்குது. அழுகின்ற கணவனை சமாதானப்படுத்தி அழுத்தமா கிஸ் தரும் போதே ஜில்லாகிறது நம்ம மனசு. அடடா இந்த வில்லன் கோஷ்டி பத்தி சஞ்சய் தத், அர்ஜூன் படே பயங்கர வில்லன்களாம்.

ஏதோ இயக்குநர் சொன்னதை செஞ்சிட்டாங்கப்பா. அதோட கெளதம் வாசுதேவமேனன் , ப்ரியா ஆனந்த் என சொல்லிக்கிட்டே போற மாதிரி கூட்டம். ஓய்… அனிருத் என செஞ்சாரு. ரசிகனின் நாடி துடிப்பு எகிறிட விஜய் குரலில் பாட வெச்சு மாஸ் காட்டி பின்னணி இசையிலும் ஸகோர் பண்ணிட்டாருங்கண்ணா. எல்சியூன்னு சொன்னவங்க உலகநாயகனை காட்சிப்படுத்தாம குரலா பதிவு செய்தது பெருத்த ஏமாற்றம் தான் ஆக விஜய் தன் ரசிகர்களுக்கு சண்டை காட்சிகளில் டபுள் விருந்து தந்து படம் முழுவதும் தூக்கி நிறுத்தும்படி செய்துள்ளது ” அய்யோ” என சொல்லவில்லை என்பதே நிஜம்!

செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …