தென்காசி மாவட்டத்தில் , காட்டு யானைகள் அட்டகாசம்… தீர்வு விரைவில்…

 

தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை ஊராட்சி,மற்றும் சில்லறை புறவு ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் , தென்னை , வாழை போன்ற விவசாய விளை நிலங்கள் உள்ளது.

இந்த விவசாய நிலங்களில் காட்டு யானைகள் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. அதோடு கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து இரண்டு காட்டு யானைகளின் உள் புகுந்து பயிர்களையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியது.

இதனால் விவசாயிகள் பெரும் மனவேதனையில் இருந்தனர். மேலும் இந்த யானைகள் மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என அஞ்சினர்.

இதனால் இந்த யானைகளை காட்டுப்பகுதியில் கொண்டு விடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தென்காசி மாவட்ட தலைவர் திரு. G.சிவலிங்கம் அவர்களிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த மக்கள் கோரிக்கையினை கடந்த 25 ந் தேதியன்று
தென்காசி கோட்டாசியர் ( ஆர்டிஓ) அவர்களது பார்வைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை கண்ட கோட்டாசியர் திருமதி லாவண்யா நர்குணன் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 31.1.2024 அன்று வருகைத் தந்து ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை அப்புறப்படுத்திடவும் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐந்து வருடங்களாக அச்சத்தில் இருந்த தங்களுக்கு உரிய நேரத்தில் உதவிய போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களுக்கும் ,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன் தென்காசி மாவட்ட தலைவர் திரு. G.சிவலிங்கம் அவர்களுக்கும் மற்றும் தென்காசி கோட்டாசியர் திருமதி லாவண்யா நர்குணன் அவர்களுக்கும் கிராம பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

 

 

Check Also

தென்காசி மாவட்டம், புதிய மாவட்ட ஆட்சியரை வாழ்த்துகிறோம் ..

தென்காசி மாவட்ட ஆட்சியராக திரு.A.K. கமல் கிஷோர் IAS அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். அவர்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன் மற்றும் …