தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என்றும், அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலை படத்தை மறைக்க போக்குவரத்து துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியபோது, தேர்தலுக்காக பறக்கும் படையினர் நடத்தும் சோதனையின்போது, ஆதாரம் இல்லை என்றால் வியாபாரிகளிடம் இருந்து பணத்தை கைப்பற்ற வேண்டியதுள்ளது. ஆனால் அந்தத் தொகையை உடனே அரசுக் கருவூலத்துக்கு கொடுத்து விடுவதில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களாக அந்தத் தொகையை எங்களுடன் வைத்திருப்போம். உரிய ஆவணங்களை உதவித் தேர்தல் அதிகாரியிடம் காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம். எனவே வாகன சோதனைகளை தளர்த்த முடியாது” என்றார்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி