சிறையில் வாடும் சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்காக திருவள்ளுர் மாவட்டம், உட்கோட்டை கிராமத்தில் நடத்தப்படும் மகாத்மா காந்தி உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாள் விழா, சென்னை, பழைய வண்ணாரப் பேட்டையிலுள்ள நண்பர்கள் நகர நல அமைப்பின் சார்பாக 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை காலை 9.30 மணியளவில் அமைப்பின் பொருளாளர் பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கோணி ஓட்டப்பந்தயம், கபடி, வாலிபால் போன்ற பல வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி ஆகியனவும் நடத்தப்பட்டன.
பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு செயற்குழு உறுப்பினர் தி. மதிவாணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அ. மனோகரன், ஜெ. செல்வராஜ், ஆர். பாலா, டி. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ. ஏகாம்பரம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
பேட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிhpயர் முனைவர் த. தனஞ்செயன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஆ. பிரகாஷ், ஆசிரியை தீபா, எஸ்தர் பேபி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
துணைத்தலைவர் மா. சிவகுமார் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ம. சுந்தர் நன்றி கூறினார்.
இவ்விழாவில் இவ்வமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
நண்பர்கள் நகர நல அமைப்பு
(பதிவு எண். 229ஃ97)
22, பழைய வண்ணை, சென்னை – 600 021.
9444233867
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி