நாங்குநேரியில் ஒரு தங்க மகனின் தேர்தல் அலப்பரை…

எதுக்கும் அளவு வேண்டாமாடா என வடிவேலு பாணியில் அஇஅதிமுக, திமுக கட்சிகளே மிரள வைத்து வரும் “பனங்காட்டு படை” ( கட்சியின் பேரே இப்படி ஆளு…எப்படி?) ஒருங்கிணைப்பாளர், ஹரி நாடார். இவரை பார்த்துதான் அலறுவதாக தெரிகிறது. கூட்டமும் தாறுமாறக வருவதை பார்த்தால் அப்படி என்ன இவரிடம் ஸ்பெஷல்…?

இவரு சென்னை தான். இருந்தாலும் மனுஷன் ஆலங்குளத்தில் வீடு பிடித்து பிரசாரத்தில் தினமும் காலை, மாலை என கிராம், கிராமமாக ஓட்டு கேட்க போறவரை பார்க்க பெண்கள் கூட்டம் அதிகமா வருதாம். அதனால் குஷியாக வலம் வருகிறார்.

ஹரிநாடார் பேச்சு வசியம் கொண்டவரா அதுக்கா வர்றீங்க என கேட்டால், ஒரு நமுட்டு சிரிப்பினை உதிர்த்து, அய்ய அவரு பேச்சா யார் கேட்கா… மனுஷன் கிலோ கணக்குல நகைப் போட்டு வாராரூ. அதான் எப்படி இருக்குன்னு பாக்க வந்தோம்ங்க. என பளீச் பதில் சொன்னதில் தப்பில்லை தான்.

ஏனெனில், ஹரிநாடார் கழுத்து, காது‌, கை என சுமக்கும் நகைகள் நாலே கால் கிலோ, 4,250 கிராம், 521 சவரன் என மாட்டிக்கிட்டு வருவது இவருக்கு பிடித்தமானதாம். ‌அதோடு தினமும் நகைகளை மாற்றுவதும் இவருக்கு அலாதி பொழுது போக்கு வேறு என்றால் இவரிடம் உள்ள மொத்த நகைகள் 1,400 சவரனாக (11 கிலோ 500 கிராம் கிட்ட வரும் போல) இதோட மதிப்பே ரூ 5 கோடியாமே.

இதாவது பரவால்ல போன தடவையும் நாங்குநேரி இடைதேர்தலில் போட்டியிம் போது தன்னிடம் 7.5 கிலோ நகைகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
‌‌இந்த ஒன்றரை ஆண்டுலே மட்டும் 3.7 கிலோ நகைகள் வாங்கியிருக்காருன்னா பாத்துங்களேன். அந்த அளவுக்கு மனுஷனுக்கு தங்க மோகமாம். எந்த டிசைன் மார்க்கெட்டில் வந்தாலும் உடனே கவ்வி விடுவாராம்.‌

வெற்றி கிடைக்குதோ இல்லையோ இது போன்ற அலப்பரைகளும் தேர்தலின் போது நடக்கும். தோல்வி வந்தா அடுத்த முறை நாம் யாருன்னு காட்டுவோம் என்கிற தாராள மனசு இவரை போன்றவர்களுக்கே வரும் போல.

மக்களும் இவரை அலங்கார பொருளா பார்க்க கூட்டம் கூடுவதும் அரசியல்கட்சிகளோ நம்ம தலையெழுத்து இப்படி ஆயிடுத்தைன்னு புலம்பவது தான் வாடிக்கையாகி வருமோ…

செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்”
Ln B.செல்வம்

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …