பயணங்கள் முடிவதில்லை

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவியின் தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், “சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, சென்னை, அம்பத்தூர், சோழபுரம், 81 வது வார்டில் அமைந்துள்ள சென்னை பெருநகர மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை திருமதி கோ. தேவதா அவர்களை, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளர் மற்றும் மாநில தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார் முன்னிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு. M. உதயகுமார் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத செப்டம்பர் 2023 இதழினை வழங்கினார்.

அவ்வமயம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான ” ஜீனியஸ்” K. சங்கர், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் துணை செயலாளர் திரு. M. சரவணன், உறுப்பினர் திரு. B. மணி ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது நம்மிடம் பேசிய தலைமையாசிரியை , நமது இதழுக்காக மாதந்தோறும் எமது பள்ளி மாணவ/ மாணவியர்களின் படைப்புகளை வழங்கினால் பிரசுரப்பீர்களா என கேட்டார். உங்களது படைப்புகள் பிரசுரத்திற்கு ஏற்புடையாக இருப்பின், முதன்மை கெளரவ ஆசிரியர் தேர்வின்படி வெளியாகும் என சொன்னோம்.

தொடர்ந்து பேசியவர், மாணவ/மாணவியர்களிடையே தமிழ் மொழியில் பேச, எழுத தமிழ்நாடு அரசு முழு வீச்சாக செயல்படுத்த பல கோடிகளை செலவிடுகிறது. இன்றைய மாணவ/மாணவியர்களின் எழுத்து மற்றும் பேச்சுத்திறனை தமிழில் முழுமையாக கொண்டு வர வேண்டும் என்பதால் அனைத்து பாடப்பிரிவுகளிலும் (தமிழ் மொழி தவிர, கணக்கு, அறிவியல், வரலாறு உள்ளிட்ட) தமிழில் பேசுவதற்கான செயல்வடிவத்தினை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

இந்த அளவுக்கு தமிழுக்கு முதன்மை தருவதற்கு மாநகராட்சி பள்ளியின் பங்களிப்பிற்கு நமது சங்கம் மற்றும் மாத இதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்றோம்.

கூடுதல் செய்தி:

நமது சங்கத்தின் விரைவான பங்களிப்பில் சாலை பாதுகாப்பு பணிக்காக அப் பள்ளி மாணவர்களுக்கு நாம் வழங்கிய சீருடையில், வருகின்ற 03.10.2023, திங்கட்கிழமை காலை 8.45 மணியளவில், காலாண்டு விடுமுறைக்கு பின், பள்ளி திறக்கும் நாளன்று சாலை போக்குவரத்து பணியினை துவக்க இருப்பதால் நமது மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு…

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அரசு விதிமுறைகளை மீறி மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் முறையை கண்டித்து …