சென்னை போலீஸ் கமிஷனர் திரு. ஏ. கே. விஸ்வநாதன் அவர்கள் பம்பரமாக சுழன்று நகரில் காவல்துறையின் செயல்பாடுகளை கவனித்து வருகின்றார். அதன்படி, முழு ஊரடங்கில் பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்தவர், சென்னையில் கடந்த 19 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை 52,234 வாகனங்கள் பறிமுதல், ஊரடங்கு உத்தரவை மீறியதால் 60,131 பேர் மீது வழக்கு, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள், முக கவசம் அணியாதவர்கள் 24,704 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
இது தவிர, போலி- இ பாஸ், பத்திரிகையாளர்கள், டாக்டர்கள் என சொல்லிக் கொண்டு போலி அட்டைகளுடன் சுற்றி திரிந்தவர்கள் என 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தவர், இது தண்டனைக்குரிய குற்றம். இவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசுகையில் ஒருவரை கைது செய்யும் போது போலீஸார் எப்படி செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழி காட்டு நெறிமுறைகளை வகுத்து தந்துள்ளது. அதன்படி, போலீஸார் சட்ட ரீதியாக செயல்பட வேண்டும். பொதுமக்களை அடிக்கக் கூடாது முக்கியமாக அவர்கள் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
இது பற்றி, சென்னை மாநகர போலீசார் உட்பட, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீசில் இது வரை 1,065 பேர் கொரோனாவில் பாதித்த நிலையில், பணிக்கு 410 பேர் திரும்பியுள்ளதாக கமிஷ்னர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” B.செல்வம்