ஒரு வருட ஊரடங்கு போட்டாலும் கவலை இல்லை! ஒரு பத்திரிக்கையாளரின் மனக்குமுறல்…

தலைநகர் சென்னையில் வசித்து வரும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கிங் மேக்கர் செல்வம் சிறு ஆதங்கம்.

கொரோனா நோயினால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு, முழு ஊரடங்கால், தற்போது ஏழை மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கூட,.. ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்…

ஆரம்ப காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை உணவுகளை கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்களும் தற்போது குறைந்துவிட்டனர்.

நீங்கள் (அரசு) ஊரடங்கை அமுல் படுத்தும், முன் இந்த அன்றாட காய்ச்சிகளின் கொடுமையை கேளுங்கள், எங்களிடம் இருந்த கொஞ்ச ,நஞ்ச அரிசி பருப்பு, ஆயிரம் ரெண்டாயிரம் என வைத்திருந்த எல்லாத்தையும், மாத வாடகை, மாளிகைசாமான், மின்சார கட்டணம், இப்படி பார்த்து பார்த்து செலவு செய்து 3 மாதங்களை கடந்து விட்டோம், தற்போது குழந்தைகளுக்கு ஒரு டம்ளர் பால் வாங்ககூட பக்கத்து வீட்டுக்காரரிடம் கையேந்தும் நிலமைக்கு ஆளாகிவிட்டோம்.

இதனால், இந்த ஊரடங்கால் சென்னையில் வசிப்பவர்களுக்கு மாத வாடகை , மின்சார கட்டணம், அன்றாடம் எங்களுக்கு உணவு போன்றவைகளை அரசு கொடுத்துவிட்டு ஒரு வருடம் கூட ஊரடங்கை அமல் படுத்துங்கள்,…

இதை நீங்கள் செய்யுங்கள், நிச்சயமாக மக்களாகிய நாங்கள் ஏன் வீட்டை விட்டு வெளியே வரப்போகிறோம். நீங்களே அழைத்தாலும் நாங்கள் வரமாட்டோம்.

இந்த கொடிய கொரோனாவில் இறப்பது கூட நல்லதாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம், தினம் தினம் உணவு இல்லாமல் பசிக் கொடுமையில் வாழ்வது மிகவும் கொடுமையானது…. தினம், தினம்.. கொஞ்சம், கொஞ்சமாக.. செத்து வருகிறோம்.

சொகுசு வாழ்க்கை வாழ கேட்கவில்லை….!!!
ஒருவேளை சோற்றுக்காக கேட்கிறோம்….!!!

Check Also

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு …