மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு கல்வி கடன் முகாம்!!!!

தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பம் மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் 10 12-ம் வகுப்பு முடித்து மேற்படிப்பு தொடர முடியாத மாணவர்கள் கல்வி கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இந்த நடைமுறை சிக்கல்களை களைந்து கல்விக்கடன் பெறுவது எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளை ஒருங்கிணைந்து சிறப்பு கல்வி கடன் முகாம் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு கடன் முகாம் வருகின்ற 15-ம் தேதி வேலூர் ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் காலை 10 முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது பாஸ்போர்ட் புகைப்படங்கள் 2,மதிப்பெண் பட்டியல்,

பான் கார்டு,ஆதார் அட்டை, ஜாதி சான்று, பெற்றோர்களின் ஆண்டு வருமான சான்று,

முதல் பட்டதாரி சான்று, கல்லூரியின் உறுதியான சான்று மற்றும் கல்வி கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த சிறப்பு கல்விக்கடன் முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் திரு.குமரவேல் பாண்டியன்I.A.S தெரிவித்துள்ளார்.

Check Also

இதனை தடுக்க வேண்டாமா?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் …