சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை ஆணையாளர் எல்லைக்குட்பட்ட சூளைமேடு காவல் நிலையம் பகுதியினை சார்ந்த கிழக்கு நமச்சிவாயாபுரம் பகுதியில் சிசிடிவி கேமராவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நுங்கம்பாக்கம் காவல்நிலைய சரகத்தின் உதவி ஆணையாளர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் திறந்து வைத்தார்.
இப்பகுதியில் மக்களின் நிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் 23 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூட்டு நடவடிக்கை குழு தலைவர் திரு.T. பெருமாள் நம்மிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான நட்பின் மகுடம் திரு.MJF Ln Dr லி.பரமேஸ்வரன், PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln Dr N. ரவி, காவல்துறை அதிகாரிகள், அப்பகுதி வாழ் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஒளிப்பதிவு: “ஜீனியஸ்” K. சங்கர்,
படத்தொகுப்பு : அமுரா


Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி