திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, விஜயாபதி ஊராட்சி, குறிஞ்சிகுளம் ஊரை சார்ந்த தருமராஜ் என்பவரின் மகன் த.முருகன் என்பவர் செய்த செயல் நம் நாட்டின் மத ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் ஒரு சான்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
விஜயாபதி கிராமத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும், நோன்பு இருப்பவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்படும். அவ்வாறு காய்ச்சி வழங்கப்படும் கஞ்சி வகைக்காக தாமாக முன்வந்து தமது நண்பர் மூலமாக ரூ. 10,000 (பத்தாயிரம்) பணத்தினை விஜயாபதி பள்ளிவாசல் ஜமாத்தினரிடம் வழங்கியுள்ளார்.
பிரதிபலன் எதிர்பாராது முருகன் அவர்கள் செய்த இந்த உதவியினை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த செயலை அறிந்த விஜயாபதி ஊராட்சி மக்கள் அனைவரும் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற இந்த மத நல்லிணக்க செயல்கள் தமிழகம் முழுவதும் தழைத்தோங்கட்டும். கோரோனோ நோய் தொற்று கால இக்கட்டான சூழ்நிலையில் கூட தன்னால் இயன்ற பெரு உதவியை செய்த முருகன் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்தி தொகுப்பு: அ முரா