மண்ணூர்பேட்டை மசூதியில் ரமலான் நோன்பு, சஹர் உணவிற்காக சிரமப்படும் வெளியூர் மக்களுக்கு இலவச சஹர் உணவு)

சென்னை, அம்பத்தூர் எஸ்டேட், மண்ணூர்பேட்டை நூருல் ஹுதா ஜும்மா மசூதியில் சஹர் உணவிற்காக சிரமப்படும், குறிப்பாக வெளியூர் மக்களுக்கு இலவச சஹர்(அதிகாலை உணவு) சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இந்தியா முழுவதிலிமிருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் அதிகமானோர் இரவுப்பணிகளிலும், சமைக்க இயலாத நிலையிலும் உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாத நோன்பு நோற்பதற்கான சஹர் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, அவர்களை கஷ்டத்தை நீக்கும் வகையில், மண்ணூர்பேட்டை நூருல்ஹுதா ஜும்மா பள்ளியின் ஜமாத்தார்கள் கடந்த சில வருடங்களாக சிறப்பான முறையில் சஹர் உணவு ஏற்பாடு செய்து அனைவருக்கும் கொடுத்து வந்துள்ளனர். கடந்த வருடம் சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.

இந்த வருடமும் ரமலான் சஹர் உணவு மண்ணூர் பேட்டை, 109, பி.கே தெருவில் உள்ள நூருல் ஹுதா ஜும்மா மசூதியில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சஹர் உணவு தேவைப்படும் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் பணிபுரியும் வெளியூர் இளைஞர்கள், நூருல் ஹுதா ஜும்மா மசூதியில் உள்ள ஜமாத்தார்களிடம்  தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு டோக்கன் பெற்று கொள்ளவும்.

இஸ்லாமியர்களின் கடமைகளின் நான்காம் கடமையான நோன்பை நிறைவேற்ற சஹர் உணவளிக்கும் மண்ணூர்பேட்டை நூருல் ஹுதா ஜும்மா மசூதியின் ஜமாத்தார்கள் மற்றும் உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

வரம் தரும் வரலட்சுமி நோன்பு!

வரலட்சுமி நோன்பு– திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், கன்னிப்பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் கிடைக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *