லுங்கிப் பிரவேசம்! சென்னையில் அதிரடி

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் ஆளூர் நவாஷ் அவர்களின் அதிரடி

சென்னை ஏரிகள் நிறைந்த ஒரு பெருநகரம். ஆனால், இன்று ஏரிகள் முழுவதும் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக உருமாற்றப் பட்டுவிட்டது.

ஏரிகளைப் போலவே சென்னையில் சேரிகளும் அதிகம். சென்னையின் உருவாக்கத்தில் சேரிமக்களின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், இன்றைய சென்னையில் சேரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.

சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்றெல்லாம் போற்றப்படும் இன்றைய நவீன சென்னையின் அடையாளங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், பிரம்மாண்ட ஷாப்பிங் மால்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், நடைபாதை கடைகளற்ற வீதிகள், ஐ.டி.நிறுவனங்கள், கே.எஃப்.சி, பீட்சா கடைகள் என சென்னை வேறுவடிவம் எடுத்து விட்டது.

தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்கள் சென்னையில் வாழத் தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர். சொந்த இடமின்றி வாடகை வீடுகளையே நம்பியிருக்கும் அம்மக்களுக்கு, வீடுகள் மறுக்கப்படுவதன் மூலம் சென்னைக்கு வெளியே துரத்தப்படுகின்றனர்.

இவை ஒருபுறம் எனில், தியேட்டர்கள் – ஹோட்டல்கள் – மால்களில் நவீன தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். லுங்கி அணிந்து வந்தால் உள்ளே அனுமதி இல்லை என்பதே அத்தீண்டாமை. இதன்மூலம் அடித்தட்டு விளிம்புநிலை மக்களை வடிகட்டுவதே அவர்களின் நோக்கம்.

இம்மண்ணின் மரபுவழி உடையான லுங்கியையும், அதை உடுத்தும் பெரும்பான்மை மக்களையும் இழிவுபடுத்தும் முதலாளித்துவப் போக்கை முறியடிக்க நண்பர்கள் சிலருடன் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், 2014 மார்ச் 1 அன்று வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலுக்குள் லுங்கியுடன் நுழைந்தார். பரிசோதனை செய்யும் இடத்தில் தடுத்து நிறுத்தப் பட்ட அவர்களை லுங்கி அணிந்து வந்தால் அனுமதி இல்லை என்றனர். அப்படியெனில் அறிவிப்பு எழுதி வையுங்கள் என்றனர். ஷாப்பிங் மால் மேலாளருக்கு தகவல் பறந்தது. ஐந்து நிமிடத்தில் அவர் ஓடோடி வந்தார். அவரும் அனுமதி மறுத்தார். எழுதிக் கொடுங்கள் என்றார். வேறு வழியே இல்லாமல் உள்ளே விட்டு விட்டார்கள்.

மகிழ்வுடன் மால் முழுவதும் சுற்றினார்கள். அனைத்து மக்களும் அவர்களையே வேடிக்கைப் பார்த்தனர். இன்னும் நிறைய மால்கள் – ஹோட்டல்கள் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் லுங்கியுடன் நுழைவோம் என்றனர் அவர்கள்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …

One comment

  1. கலீல் பாகவீ

    குவைத்தில் வசிக்கும் நான் அலுவலகம் மற்றும் முக்கியமான அரசாங்க நிகழ்ச்சிகள் தவிர அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு லுங்கியுடன்தான் செல்கின்றேன்.

    இதுவரை யாரும் ஒன்றும் சொல்ல வில்லை. நம்ம ஆளுங்கதான் ஒருமாதிரியாக பார்ப்பாங்க…

    இன்னும் சொல்லபோனால் குவைத் நாட்டின் பழைய உடையே நமதூர் லுங்கிதான் என்பது கூடுதல் தகவல். தங்களின் குழந்தைகளுக்கு லுங்கி கட்டும் முறையை சொல்லிக் கொடுக்கிறார்கள் குவைத்திகள்.

    பெரும்பாலான குவைத் நாட்டினர் வீட்டில் லுங்கிகளையே கட்டிக் கொண்டுள்ளனர்.

    என்றும் மாறா அன்புடன்…
    குவைத்திலிருந்து…
    பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *