தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.
அந்த புகார் மனுவில், வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவரின் புகைப்படம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால் அவர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் பதிவாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
இது குறித்து திமுக சார்பில் வருவாய்த் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. .
எனவே, உடனடியாக வரைவு வாக்காளர் பட்டியலை சரி செய்து அதில் உள்ள குளறுபடிகளை நீக்கம்படி கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி