கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்பட்ட இதய பாதிப்பினை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சிரிஷா என்ற பெண்ணின் கருவில் இருந்த குழந்தை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. கருவில் இருந்த குழந்தைக்கு இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்த மருத்துவர்கள், அந்த குழந்தை பிறந்த பிறகு அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டனர்.
எனவே, கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. குழந்தையின் பாதிக்கப்பட்ட வால்வு கருவிலேயே அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு, தற்போது, தாயும், கருவில் உள்ள குழந்தையும் நலமாக உள்ளனர். குழந்தையின் உடல் எடையும் நன்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி