இந்தியாவில் மதவெறிக்கும், வெறுப்புணர்விற்கும் இடமில்லை என்பதை பீகார் மக்கள் தங்களது வாக்குச்சீட்டுகள் மூலம் நிரூபித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ஊடகத்துறை, விமானத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டை கொண்டுவரும் மத்திய அரசின் முடிவு ஆபத்தானது என கூறினார்.
நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கும் அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை பீகார் மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளாதாகுவும், அந்த மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் ஜவாஹிருல்லா கூறினார்.