[pullquote]தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல என் டாடிதான் காரணம் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.[/pullquote]
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது,
ஜெயலலிதா நேற்று பிரச்சாரத்தின் போது தமிழக வளர்ச்சிக்கு காரணம் இந்த லேடி தான் என்று கூறியிருந்தார். ஜெயலலிதாவின் நேற்றைய கருத்து குறித்து விமர்சித்த ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எனது டாடி தான் காரணம் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தாம் கண்டது திமுகவிற்கு ஆதரவான மக்கள் அலை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் படும் துயரத்தை கண்டு தாம் வேதனை அடைந்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி