சென்னை சோழிங்கநல்லூரில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி இன்று விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட ஐ.டி.நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஐ.டி.நிறுவனங்களில் இன்று பணிபுரிந்து கொண்டிருந்த 3500க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றி தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நாளான இன்று அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறிய ஐ.டி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில ஐ.டி நிறுவன ஊழியர்களும் புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி