சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர் அடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார். மேலும்
காஞ்சிபுரத்தில் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக போஸ்டர் அடித்த விவகாரத்தில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான கே. பரிமளம் சார்பில் காஞ்சிபுரத்தின் பிரதான சாலையான காந்திசாலை வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே 4 பிரமாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்த பேனரில்”அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம்” வாழ்த்து செய்தி சொல்லப்பட்டிருந்தது.
ஒரு பேனரில் ”40 எம்.பி.யையும் வெற்றி பெற்றோம்” என்ற வாக்கியமும் பதிவு செய்யப்பட்டது.
இந்த பிளக்ஸ் பேனர்களால் காஞ்சிபுரத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது