நாளை டிஎன்பிஎஸ்சி விஏஓ தேர்வு – காலியாக உள்ள இடங்கள் 2,342

திருச்சி: தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 விஏஓ பணியிடங்களை நிரப்ப நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நாளை தேர்வு நடத்துகிறது.

தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்  வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுவோர் அதை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுத வரும்போது கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

[pullquote]

விஏஒ ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய கிளிக் செய்யவும்

ஹால்டிக்கெட்

[/pullquote]

நாளை காலை 10 மணிக்கு  தேர்வு தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 250 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். கருப்பு அல்லது நீலநிற பால்பாயின்ட் பேனாக்களை மட்டுமே தேர்வுக்கு பயன்படுத்த வேண்டும். முறைகேடுகளை தடுக்க தலைமையில் உயர் அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் அடங்கிய நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களும், பறக்கும்படையினரும் தேர்வு மைங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்வார்கள். முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது இந்த குழுக்கள்  நடவடிக்கை எடுக்கும்.தேர்வு அறை முழுவதும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டு கண்காணிக்கவும், வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு அதாவது 10.30 மணிக்கு பின்னர் தேர்வர்கள் யாரையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்க கூடாது.

தேர்வர்கள் யாரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேப்லட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு சாதனங்கள் கண்டறியப்பட்டால் தேர்வர் மேற்கொண்டு தேர்வெழுதுவது தடை செய்யப்படும். தேர்வின் நடைமுறைகள் வீடியோகிராபர் ஒவ்வொரு அறையாக சென்று ஒளிப்பதிவு செய்ய வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளி தனி அறைகளில் எழுதும் தேர்வை அடிக்கடி சென்றும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். தேர்வு சரியான நேரத்திற்கு முடிக்கப்பட வேண்டும். தேர்வு முடிந்த பின் விடைத்தாள்கள் பேக்கிங் நடைமுறைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. தேர்வாணைய தலைவர் கூறுகையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்றார்.

விஏஓ தேர்வில் பொது அறிவு பகுதியில் 75 வினாக்களும், கிராம நிர்வாக நடைமுறைகள் குறித்து 25 வினாக்களும், திறனறித் தேர்வு பகுதியில் 20 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்க¤லம் பிரிவில் 80 வினாக்களும் இடம் பெறும். 200 வினாக்களுக்கு தேர்வாளர்கள் விடையளிக்க வேண்டும். ஒரு வினாவிற்கு தலா ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் 300 மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *