கால்பந்து: நெய்மாரின் இரட்டை கோல்களால் முதல் ஆட்டத்தில் பிரேசில் வெற்றி!

சா பாலோ நகரில் உள்ள கொரிந்தியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் மற்றும் குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் குரோஷியா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது. உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரை பிரேசில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நட்சத்திர வீரர் நெய்மர் இரண்டு கோல்கள் அடித்து பிரேசில் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தங்களது விறுவிறுப்பான ஆட்டத்தினால் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது கோலைப் பதிவு செய்தது. அணியின் வீரர் நெய்மர் கோல் அடித்தார்.

பின்னர் கோல் அடிப்பதற்காக குரோஷியாக கடுமையாக போராடியது. ஆனால் அந்த அணிக்கு பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் இறுதியில் பிரேசில் வீரர் ஆஸ்கர் மூன்றாவது கோலை அடித்தார். பிரேசில் அணியின் வெற்றி உறுதியானது. ஆட்ட முடிவில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது. உலகக் கோப்பை தொடரை பிரேசில் வெற்றியுடன் தொடங்கியிருப்பது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *