பிரேசிலின் வடகிழக்கேயுள்ள நட்டால் நகரில் மழையிலே நடைபெற்ற ஒரு போட்டியில் கேமரூன் அணியை மெக்ஸிகோ 1-0 எனும் கணக்கில் வென்றது.
போட்டியின் இரண்டாவது பகுதியில் 61 ஆவது நிமிடத்தில், ஒரிபி பெராட்லா ஒரு கோல் அடிக்க மெக்ஸிகோ 1-0 என்று முன்னிலை பெற்றது. பின்னர் அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டு வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்ஸிகோ அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.
எந்தவொரு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் இதுவரை மெக்ஸிகோ, அப்ரிக்க அணியொன்றை தொற்கடித்தது கிடையாது .
இந்தப் போட்டியிலும் நடுவரின் முடிவு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இடைவேளைக்கு முன்னர் மெக்ஸிகோ அணியினர் இருமுறை பந்தை கோல் வலைக்குள் அடித்தனர். எனினும் இரண்டையும் ஆஃப்-சைட் என்று கூறி நடுவர் நிராகத்துவிட்டார்.
இந்தப் போட்டிக்கு கொலம்பியா நாட்டின் வில்மார் ரோல்டான் களநடுவராக இருந்தார்.