கால்பந்து உலகக் கோப்பை: கேமரூனை வென்றது மெக்ஸிகோ

பிரேசிலின் வடகிழக்கேயுள்ள நட்டால் நகரில் மழையிலே நடைபெற்ற ஒரு போட்டியில் கேமரூன் அணியை மெக்ஸிகோ 1-0 எனும் கணக்கில் வென்றது.

போட்டியின் இரண்டாவது பகுதியில் 61 ஆவது நிமிடத்தில், ஒரிபி பெராட்லா ஒரு கோல் அடிக்க மெக்ஸிகோ 1-0 என்று முன்னிலை பெற்றது. பின்னர் அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டு வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்ஸிகோ அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.

எந்தவொரு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் இதுவரை மெக்ஸிகோ, அப்ரிக்க அணியொன்றை தொற்கடித்தது கிடையாது .

இந்தப் போட்டியிலும் நடுவரின் முடிவு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இடைவேளைக்கு முன்னர் மெக்ஸிகோ அணியினர் இருமுறை பந்தை கோல் வலைக்குள் அடித்தனர். எனினும் இரண்டையும் ஆஃப்-சைட் என்று கூறி நடுவர் நிராகத்துவிட்டார்.

இந்தப் போட்டிக்கு கொலம்பியா நாட்டின் வில்மார் ரோல்டான் களநடுவராக இருந்தார்.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *