ஈராக்கில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேரும் ஏர்இந்தியா விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தனர்.
பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் கொச்சி புறப்பட்ட அவர்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.
இந்திய செவிலியர்களை கேரள முதல்வர் உமன்சாண்டி வரவேற்றார். மேலும் ஈராக்கில் சிக்கி தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் நன்றி தெரிவித்தார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி