பொது பட்ஜெட் – 2014- 2015ன் முக்கிய அம்சங்கள்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில்,
விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.
5 லட்சம் நிலமில்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி.
வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் இந்த ஆண்டில் துவக்கப்படும்.
விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.
தேசிய அளவில் வேளாண் சந்தைகள் விரிவுபடுத்தப்படும்.
நிலங்களுக்கு ஏற்ற பயிர்களைதேர்வு செய்ய மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
தபால் நிலையங்கள் மூலமாக பெறப்பட்டு பயன்படுத்தாமல் உள்ள நிதிகளை முறையாகப் பயன்படுத்த திட்டம்.
விவசாய கட்டமைப்புகளை அதிகரிக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
குறுகிய கால ஊரக மறு சுழற்சி நிதி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு.
கிராமப்பற தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்குடு.
சுற்றுலாத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக அதிகரிப்பு.
இந்தியாவில் ஏற்கனவே உள்ள துறைமுகங்களை தரம் உயர்த்த ரூ.11 ஆயிரம் கோடி நிதி.
தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் சூரிய ஒளி மின்சார திட்டம் உருவாக்கப்படும். இதற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு
இந்தியாவில் கூடுதலாக 15,000 கி.மீ தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் பதிப்பு.
தேசிய நெடுஞ்சாலைகள் துறையில் மாநில நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.37,887 கோடி முதலீடு. இதில் ரூ.3000 கோடி வடகிழக்கு மாநில தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிதியும் அடக்கம்.
16 புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும்.
வேளாண் தொலைக்காட்சி துவக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த சிறப்பு கவனம்.
ஒரு குடும்பத்துக்கு 2 வங்கிக் கணக்குகள் தொடங்க வசதி செய்து தரப்படும்.
அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே வாடிக்கையாளர் இணைப்பு மையம் துவக்கம்.
பெண் குழந்தைக்ளுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம். பெண் குழந்தையின் கல்வி, திருமணத்தக்கு உதவும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் துவக்கப்படும்.
தமிழகம் உட்பட 6 இடங்களில் ரூ.200 கோடியில் ஜவுளி தொழில்நுட்பம்.
அனைத்து பணப்பரிமாற்றங்களுக்கும் ஒரே டிமேட் கணக்கு.
புதிதாக 6 கடன் வசூல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
கிடங்குகளின் திறனை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு.
நதிகள் இணைப்புக்கு தீவிர முயற்சி எடுக்கப்படும்
நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு.
காஞ்சி, மதுரா உள்பட தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி.
வெளிநாட்டு நிதி உதவியை வரையறைப்படுத்த திட்டம்.
நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கப்படும்.
காப்பீடு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பு.
அதில், காப்பீட்டுத் துறையில் 49 சதவீதமாக அந்நிய முதலீடு அதிகரிக்கப்படும்.
பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு மூலம் கூடுதல் நிதி திரட்டப்படும்.
இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர ஸ்கில் இந்தியா என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.
இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.
24 மணி நேரமும் மின் வசதி என்பதே மத்திய அரசின் இலக்கு.
சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் இ – விசா சேவை அறிமுகம்.
இந்த இ-விசா சேவை இன்னும் 6 மாதங்களில் செயல்படுத்தப்படும்.
பெண்கள் பாதுகாப்புக்காக உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்படும்.
மூத்த குடிமக்களின் ஓய்வூதிய திட்டம் ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் பிரெய்லி முறை அறிமுகம்.
இந்தியாவில் மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும். ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பூர்வாஞ்சள் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கப்படும்.
படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வரப்படும்.
தேசிய குடிநீர் திட்டத்துக்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு.
5 ஐஐடிக்கள் மற்றும் 5 ஐஐஎம்கள் புதிதாக உருவாக்கப்படும்.
கிராமங்கள் அனைத்தும் பிராட் பேண்ட் மூலமாக இணைக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.50,047 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் வீடுகளை கட்டும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு.
மதராசாக்களை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.