உலகையை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தடுப்பு மருந்து இல்லாமல் இருக்கிறது என்ற கவலையை கனடா நாட்டு ஆய்வாளர்கள் போக்கி இருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடித்த வைரஸ் கொல்லி மருந்து குரங்குகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை வெற்றி அடைந்துள்ளதாக கனடாவை சேர்ந்த பொது சுகாதார ஏஜென்சி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகி உலகம் முழுவதும் உள்ளவர்களை அச்சுறுத்தி வருவது எபொலா வைரஸ்.
கனடாவின் பொது சுகாதார ஏஜென்சியை சேர்ந்த ஆய்வு குழு தலைவர் கேரி கோபின்கர் கூறுகையில்,
கனடா ஆய்வு கூடத்தில் எபோலா வைரஸ் செலுத்தப்பட்ட 18 குரங்குகள் நோய் முற்றிய நிலையில் குணப்படுத்தப்பட்டுள்ளன. எனவே மனிதர்களுக்கும் இந்த மருந்து வேலை செய்து உயிரை காப்பாற்றும் என்று அறிவித்துள்ளார்.