சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த, சமீபத்தில் பிரமாண்டமாக (சொதப்பலாக) இசை வெளியீட்டு விழா நடந்த “ஐ” படத்தின் கதை என்று இணையத்தில் ஒரு கதை உலா வருகிறது. அக்கதையின்படி இந்தப் படம் “த ஃப்ளை” என்று 1986 ல் வெளிவந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார், ஹீரோ. அந்த சோதனையில் தன்னையே உட்படுத்திக் கொண்ட போது, அனுப்பும் தளத்தில் ஒரு ஈயும் சேர்ந்து விட, ஹீரோ மனிதனும், ஈயும் சேர்ந்த கலப்பினமாக மாறி விடுகிறார். அதனால் அவரது உடம்பிலும், முகத்திலும் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மனிதனாக மாறுவதற்கான போராட்டங்கள், இடையில் காதலியுடனான பிரச்சனைகள் என்று படம் போகிறது.
ஷங்கர் இந்தப் படத்தின் கதையாக சொல்லியிருப்பது, ஆண் மாடலுக்கு வில்லன் மருந்து செலுத்தி விலங்கு மனிதனாக மாற்றுவது என்று போகிறது. அதில் கூட, குறைவு இருக்கலாம். அடிப்படையில் பல காட்சிகள் ஃபிளை படத்திலிருந்து வருகின்றன. டிரெய்லரை பாருங்கள்.
இணையத்தின் படி இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக போராடி வெற்றி பெறுகிறார். பொறுக்காத போட்டி விளம்பர வில்லன் நடிகர் வைரஸ் கிருமி மருந்தை விக்ரம் உடலில் செலுத்துகிறார். விக்ரம் உடல் மாறுகிறது. அதையே அதிகமாக காட்டினால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள், ஃபேமிலி சப்ஜெக்டாக மாற்ற முடியாது என்பதால் அசிங்கமான விக்ரமை வைத்து பல்வேறு ஆக்சன் காட்சிகள், கிராபிக்ஸ் பாடல்கள் என்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். இறுதியில் விக்ரம் தனது சிக்ஸ் பேக் உடலை திரும்பப் பெற்று வில்லனை வீழ்த்தி நாயகியை கைபிடிப்பார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
எது உண்மையோ படம் வெளிவந்த பிறகு பார்ப்போம்.