ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் லா லீகா (பிரதான லீக்) கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்கு பார்ஸிலோனா கிளப்பைச் சேர்ந்த ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸ்ஸி சொந்தக்காரராகியுள்ளார்.
செவில் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற லா லீகா கால்பந்தாட்டப் போட்டியில் லயனல் மெஸ்ஸி போட்ட 3 கோல்களின் உதவியுடன் பார்ஸிலோனா 5 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் லா லீகா கால்பந்தாட்டப் போட்டிகளில் தனது கோல் எண்ணிகையை 253ஆக லயனல் மெஸ்ஸி உயர்த்திக்கொண்டார்.
தனது 289 லா லீகா போட்டியில் விளையாடிய மெஸ்ஸி, இரண்டாவது கோலை போட்டபோது புதிய சாதனைக்கு சொந்தக்காரரானார். இதற்கு முன்னர் டெலமோ ஸாரா 251 கோல்களைப் (347 போட்டிகள்) போட்டு முன்னிலையில் இருந்தார்.