சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கங்களின் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதேபோல், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் சார்பில், ரயில் மறியல் போராட்டமும், சென்னை சென்ட்ரலில் நடத்தப்பட்டது.
இதனால், சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.