சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, கீரைத்தோட்டம் மண்டலம் 4, பகுதி 10, வார்டு 40ல் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல் குப்பைகளின் ஆக்கிரமிப்பில் பகுதி வாழ் மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்தது.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr L. பரமேஸ்வரன் அவர்களிடம் பகுதி வாழ் மக்கள் சார்பில் விளையாட்டு திடலை சீராக்க நேரில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞர் அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் துணை ஆசிரியருமான திரு Ln. L. வேலாயுதம் அவர்களிடம் இதற்கு தீர்வு காணும்படி உத்தரவிட்டார்.
உடனே சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை ஆய்வாளரை நேரில் சந்தித்து இதற்கு தகுந்த தீர்வு காணும்படி மனு அளித்ததன் பலனாக சுகாதாரத்துறை ஆய்வாளர் திரு. கோவிந்தராஜ் அவர்களின் நேரடி கண்காணிப்பில் விளையாட்டு திடல் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதற்கான முயற்சியில் ஒத்துழைப்பினை தந்த போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி நிர்வகத்திற்கு பகுதி வாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இத்துடன் சுத்தமில்லா விளையாட்டு திடலையும், நமது களப்பணியின் மூலம் சுத்தமாக்கப்ட்ட படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி





