காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பா?

காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதறல் துண்டுகள் என்று கூறி சீன அரசின் இணையதளத்தில் (Chinese State Administration of Science, Technology and Industry for National Defense)  மூன்று செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கிளம்பிய விமானம் சீன கடற்பகுதியில் காணாமல் போனது.

c=malair-2

அந்த விமானம் கடலில் விழுந்ததா, கடத்தப்பட்டதா என்று ஒரு விவரமும் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் சீன அரசின் இணையதளத்தில் மூன்று செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய பகுதிகளின் புகைப்படங்கள் அது என்று கூறப்படுகிறது.  அதில் கடலில் மிதப்பதாக சில பாகங்கள் காட்டப்பட்டுள்ளது. அதில் ஒன்று 24க்கு 22 மீட்டர் அளவு வரை பெரிதாக உள்ளது. மற்றவை 13க்கு 18 மீட்டரும், 14க்கு 19 மீட்டரும் பெரிதாக உள்ளன.

அந்த சிதறல் துண்டுகள் மலேசியா மற்றும் வியட்நாமுக்கு இடையே உள்ள கடல்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தை தேடும் பணியில் 10 சீன செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் மலேசிய அரசு, விமானத்தின் எந்த பாகங்களும் அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி

295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *