உடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை! 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்! அனிமேஷன் வீடியோ…

சீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது குறிப்பாக உலகின் மிகப்பெரிய அணையாக கருதப்படும் சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணைகள் உடையும் அபாயத்தில் உள்ளது .

இந்த அணை உடைந்தால் யுகான் மாகாணமே நீரில் மூழ்கும். 2012 ஆம் ஆண்டு இந்த அணை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இந்த அணை கட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல விஞ்ஞானிகள் இது பேராபத்தை விளைவிக்கும் என எச்சரித்துள்ளனர். அப்படி இருந்தும் சீனா இந்த அணைகளை கட்டியது. பல கிராமங்கள் அகற்றப்பட்டது. கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வீடுகள் மற்றும் சொந்த நிலங்களை விட்டு அகற்றப்பட்டனர் .

1000 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்க பகுதி கொண்ட இந்த அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் முடிந்தளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் பல கிராமங்களை மூழ்கடித்துள்ளது. மேலும் வெள்ளத்தை கட்டுப்படுத்த சிறு சிறு அணைகளுக்கு வெடி வைத்து இடித்து நீரை வெளியேற்றி வருகிறது சீனா.

இன்னும் 10 நாட்கள் இதேபோல மழை நீடித்தால் உலகின் மிகப்பெரிய அணை உடைந்து விடும். ஒருவேளை இது நடந்தால் அந்த அணையிலிருந்து 100 மீட்டர் உயரத்திற்கு செல்லும் தண்ணீர் 5 நகரங்களை முழுவதுமாக மூழ்கடித்து பல காடுகளை அழித்து இறுதியாக 20 -30 அடி உயர வெல்லமாக யுகான் நகரத்தில் நுழைந்து அந்த நகரத்தையே நிலைகுலைய செய்யும் .

இந்த அணை உடைந்தால் என்ன ஆகும் என்பதை பிரபல தனியார் நிறுவனம் ஒன்று அனிமேஷனாக வெளியிட்டுள்ளது அந்த வீடியோ கீழே உள்ளது

http://twitter.com/caijinglengyan/status/1286118329954873345

Check Also

சென்னையை நெருங்கும் “நிவர்”

இன்னும் 6 மணி நேரத்தில் புதுச்சேரி, சென்னையை தாக்க உள்ள “நிவர்” புயலின் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. …