சென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…

சென்னை, இராயபுரம் உசேன் மேஸ்திரி தெரு, ஃபகீர் சார்பு தெரு, ஷேக் மேஸ்திரி தெரு (HFS STREETS) குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம், அரசு யுனானி மருத்துவமனை மற்றும் முபத்தல் பாலி கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் பல்நோக்கு (இலவச) மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம், உலக சுகாதார தினம், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 12 ஆம் ஆண்டு விழாவையொட்டி, 11.04.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

அரசு ஆணையின்படி சமூக இடைவெளியில் பாதுகாப்பான வகையில் நடைபெற்ற முகாமில், இரத்ததானம், நீரிழிவு, இதயத்துடிப்பு, கொலஸ்டிரால், தைராய்டு, BP, ECG,ECHOGGRAM, குழந்தைகள் மருத்துவம், எலும்பியல், பல், கண் பரிசோதனை மற்றும் சிறப்பு யுனானி மருத்துவ சிகிச்சையும், பொதுவான சிகிச்சைகளுக்கு இலவச மருந்துகள் இதில் பயன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.

இம் முகாம் மூலம் சுமார் 600 க்கு மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது. முக்கிய நிகழ்வாக கொரோனா தடுப்பு ஊசியினை சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் இலவசமாக போடப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆவலுடன் பயன்படுத்தியது குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்வில் அரசு யுனானி மருத்துவமனை துணை இயக்குநர் திரு. Dr. ஜாகீர் அகமது M.D., அவர்களது முழுமையான ஒத்துழைப்பில், சங்கத்தின் தலைவர் திரு. கிருஷ்ணசாமி, செயலாளர் திரு. முகமது பாரூக், பொருளாளர் திரு. வெங்கட்டூ, கெளரவ ஆலோசகர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


ஒளிப்பதிவு:
கந்தவேல்
செய்தியாக்கம்:
” ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …