போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில், 24.04.2021 சனிக்கிழமையன்று, மணலி, மாத்தூர் மூன்றாவது மெயின்ரோட்டில், கோரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் விதமாக “விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான திரு. S.இதாயதுல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. செய்யது சுலைமான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயல் தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. T.J. ஆனந்தன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியருமான Ln B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. P.K. மோகனசுந்தரம், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.சதீஷ், M2 ஆய்வாளர் (சட்டம், ஒழுங்கு) திருமதி V.மேரி ராணி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர், முககவசம் வழங்கி, கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்களின் நலனுக்காக செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வில், மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
ஒளிப்பதிவு: P.K. மோகனசுந்தரம், A. செய்யது சுலைமான்
செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K.சங்கர்