விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஜமீன் நத்தம்பட்டியில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா!…

தனக்காக வாழாமல் மக்கள் நலனுக்காவே வாழ்ந்து மறைந்த பாரத பெருந்தலைவர் ஐயா கு. காமராஜர் அவர்களது பெயரில் நம் ஊர்லேயும் அரங்கம் வேண்டும் என்கிற முழு முயற்சியாக ஜமீன் நத்தம்பட்டி நாடார் உறவின் முறை மற்றும் பாரத பெருந்தலைவர் கு. காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் ஒன்று சேர்ந்து பாரத பெருந்தலைவர் கு. காமராஜர் அரங்கம் ஒன்றை நிறுவினர். அதன் திறப்பு விழா ஊர்த்திருவிழா போல் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் கடந்த 29.08.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், வரவேற்புரையினை, ஆசிரியர், திரு.K. முத்துராஜ் அவர்கள் நிகழ்த்திட, கல்வி தந்தையும், கொடை வள்ளலும், ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான திரு. பேராசிரியர் Dr A.கனகராஜ், M A., B.Ed.,M Phil., அவர்களது தலைமை வகித்திட, நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் திரு. G.கரிக்கோல்ராஜ் அவர்களது திருக்கரங்களால் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் பேசிய திரு. கனகராஜ் அவர்கள், பேசுகையில் தான் பிறந்த மண்ணாக இருந்தாலும் தனது கஷ்ட காலத்தில் ஜமீன்நத்தம்பட்டியில் வாழ்ந்த நாடார் சமூகத்தினை சேர்ந்தவர்களின் அன்பினாலும், அரவணைப்பாலும் ஒரு மாபெரும் கல்வி சாம்ராஜ்யம் உருவாக்கிட உறுதுணை புரிந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு என்றென்றும் நன்றி கடமைப்பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

திரு. கரிக்கோல்ராஜ் அவர்களது ஏற்புரையில் சாதி, மத வேறுபாடுகளின்றி தன் மக்கள் நலனே என முக்கியம். அதுவே அவரது லட்சியமாய், தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த நம் தலைவரது பெயரினை தாங்கி, திறப்புவிழாவை நடத்திட வாய்ப்பளித்த ஊர்பொதுமக்களுக்கு நன்றி, இதே வேளையில் நம் இளைஞர் சமுதாயம் தங்களையும் காத்து மற்றவர்கள் நலனுக்காக உழைத்திட தயாராக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இளைஞர்களாகிய உங்களது வீரமும், விவேகமும் போற்றுதலுக்குரியது என தெரிவித்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S. தங்கப்பாண்டியன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. A.R.R. ரகுராமன், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திரு.ஞா. சிங்கராஜ் , மேலராஜ குலராமன் பஞ்சாயத்து தலைவர் திரு.G. விவேகானந்தன், ஜமீன்நத்தம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. M.பனமாயி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
நன்றியுரையினை திரு.A.சம்பத் நிகழ்த்தினர்.

இந்த அரங்கம் பிரம்மாண்டமாய் அமைய, அரகங்கத்திற்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த என்றும் மக்கள் நினைவில் வாழும் திரு.T.V. மேகநாதன் அவர்கள் பங்கானது முக்கியமான ஒன்றாகும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் திரு.J. மரியஜெயபாலன், நாட்டாமை திரு.V. சீனிராஜ், செயலாளர் திரு.V. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன், சென்னையை சேர்ந்த அண்ணாச்சி திரு.மான்ராஜ், திரு. சந்திரன் பங்களிப்பிலும், ஜமீன் நத்தம்பட்டி இளைஞர்கள் மற்றும் ஊரே திரண்டு வந்து பங்கு கொண்ட கோலாகலமான விழாவாக நடந்தேறியது என்பது குறிப்பிடதக்கது.

செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln B. செல்வம் M.A.,