தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

பெருந்தலைவர் காமராஜர் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பரங்கிமலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை மாநிலத் தலைவர் T.A நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

இதில் O.B.C துறை செயலாளர்கள் பாண்டியன் மற்றும் சின்னா, வடசென்னை மாவட்ட தலைவர் மோகன் மற்றும் நிர்மல் செயல் தலைவர் பிரபாகர், மாவட்ட துணைத் தலைவர்கள் வேளாங்கண்ணி,டெக்ஸ்டர் ஆல், சபரி பிரியன், மகேஷ், லோகேஷ் பிரியன், வெங்கடேஷ், கண்டோன்மெண்ட் நகர செயலாளர் மேகலா மற்றும் OBC துறை அனைத்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

– செய்தியாக்கம்
– கந்தவேல்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …